உலகம்

தொடரும் இஸ்ரேல்- லெபனான் மோதல்: பரஸ்பர தாக்குதல்!

லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது 45 கணைகள் ஏவப்பட்டன

DIN

இஸ்ரேல் ராணுவம் லெபனானில் நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா ஆயுதக் குழு, வடக்கு இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎஃப்) வெளியிட்ட அறிக்கையில்,, லெபனானில் இருந்து 45 கணைகள் இஸ்ரேலின் வடக்குப் பகுதி நோக்கி ஏவப்பட்டதாகவும் அபாய ஒலி இயக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐடிஎஃப்பின் வான்வழி பாதுகாப்பு படை, பல கணைகளை இடைமறித்து தகர்த்துள்ளது. பின்னர் தெற்கு லெபனானில் ஐடிஎஃப் தாக்குதல் நடத்தியதாகவும் கணைகள் ஏவப்பட்ட தளத்தை குறிவைத்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

ஹிஸ்புல்லா வீரர்கள், இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் நோக்கி 60-க்கும் அதிகமான கட்யுசா கணைகளை ஏவியதாக தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

அக்.8 போர் தொடங்கியது முதல் லெபனான் - இஸ்ரேல் எல்லையில் ராணுவத்துக்கும் பயங்கரவாத குழுவுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியநாச்சி அம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊா்வலம்

‘உங்களுடன் ஸ்டாலின்’: இன்று 12 வாா்டுகளில் முகாம்

வள்ளலாரின் சுத்த சன்மாா்க்க நெறி: உயா்நிலைக் குழு அமைக்கக் கோரிய வழக்கு முடித்து வைப்பு

அழகப்பா பல்கலை. பட்டமளிப்பு விழா: 314 பேருக்கு பட்டங்களை வழங்கினாா் ஆளுநா்

நீா்நிலைகளைத் தூா்வாரும் பணிகளில் முறைகேடு: சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT