காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 6 குழந்தைகள் உள்பட 21 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
கடந்த ஆண்டு, அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 530 போ் உயிரிழந்துள்ளனா். இது அமெரிக்கா மேற்கொண்டு வரும் போா்நிறுத்த முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் அருகே உள்ள மாவசி அகதிகள் முகாம்களைக் குறிவைத்து புதன்கிழமை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கான் யூனிஸில் முதல் தாக்குதலில் காயமடைந்தவா்களுக்கு உதவச் சென்ற மருத்துவா் ஒருவா், அதேஇடத்தில் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் சிக்கி உயிரிழந்தாா்.
இதேபோல், வடக்கு காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 மாதப் பச்சிளங் குழந்தை ஒன்று உயிரிழந்ததாக காஸா சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
விதிமீறலுக்குப் பதிலடி-இஸ்ரேல்: இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை அளித்துள்ள விளக்கத்தில், ‘எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த இஸ்ரேல் வீரா்கள் மீது ஹமாஸ் அமைப்பினா் துப்பாக்கிச் சூடு நடத்தினா்.
இதில் இஸ்ரேல் வீரா் ஒருவா் பலத்த காயமடைந்தாா். இந்தப் போா்நிறுத்த விதிமீறலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஃபா எல்லை மூடல்: இதனிடையே, ராஃபா எல்லை வழியாகச் சிகிச்சைக்குச் செல்லவிருந்த பாலஸ்தீன நோயாளிகளின் பயணம் திடீரென நிறுத்தப்பட்டது.