கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

கடந்த ஏப்ரல் மாதம் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.

DIN

மிச்சிகன் மாகாணத்தில் கோழிப் பண்ணையில் பணிபுரியும் ஊழியருக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பண்ணை ஊழியருக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லேசான அறிகுறியுடன் இருந்த ஊழியருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் வைரல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு இதுவரை இருவருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக அமெரிக்காவில் கடந்த 2022-ஆம் ஆண்டில் கொலராடோ மாகாணத்தில்தான் பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்

1997ல் சீனாவில் முதல் முறையாக மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டன. 

பறவைக் காய்ச்சல் எனப்படும்  ஹச்5என்1 வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். மேலும் உயிருக்கு ஆபத்தான நிமோனியா காய்ச்சலை இரு உருவாக்கும். 

கம்போடியாவில் 2003 முதல் 2014 வரை 56 பேர் ஹச்5என்1 (H5N1) வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 37 பேர் இறந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 22 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு!

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

பிஎஃப்ஐ கோப்பை: இறுதிச்சுற்றில் மஞ்சு, அங்குஷிதா

வடமேற்கு தில்லியில் 1.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 போ் கைது!

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

SCROLL FOR NEXT