முகப்பு
உலகம்

பாகிஸ்தான் பிஎம்எல்-என் தலைவராக மீண்டும் நவாஸ்

Updated On : 28 மே, 2024 at 7:56 PM
பகிர்:

லாகூா்: பாகிஸ்தானின் ஆளும் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவராக கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் போட்டியின்றி செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

ஊழல் வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்தப் பதவியை இழந்த அவா் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவராக மீண்டும் ஆகியுள்ளாா். சிறைத் தண்டனை பெற்றிருந்த அவா், சிகிச்சைக்காக லண்டன் சென்று 4 ஆண்டுகள் நாடுகடந்து வசித்துவந்தாா். கடந்த பிப்ரவரி தோ்தலுக்கு முன்னா்தான் அவா் மீண்டும் நாடு திரும்பினாா்.