உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, பெல்ஜியம் பிரதம அமைச்சர் அலெக்ஸாண்டர் டி க்ரூ இருவரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக பெல்ஜியம் அரசு தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை, ஸெலென்ஸ்கி இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையை ஸ்பெயின் நாட்டுடன் மேற்கொண்டார். அந்த உடன்படிக்கை மூலம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுத உதவியை உக்ரைன் பெறவுள்ளது.
பெல்ஜியம் சார்பில் அளிக்கப்படும் எஃப்-16 வகை போர் விமானங்களை அளிப்பதற்கான நெறிகாட்டுதல்களை வழங்க மெல்ஸ்ப்ரோக் ராணுவ விமான நிலையத்துக்கு உக்ரைன் அதிபர் செல்லவுள்ளார்.
உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவதாக ஒப்புக்கொண்ட நாடுகளில் பெல்ஜியமும் ஒன்று.
2022 பிப்ரவரி முதல் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் உக்ரைன், நேட்டோ நாடுகளுடன் தனித்தனியாக பாதுகாப்பு உடன்படிக்கைகளை ஜுலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி மேற்கொண்டுவருகிறது.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உடன் உக்ரைன் ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
அமெரிக்காவுடனான உக்ரைன் பாதுகாப்பு உடன்படிக்கை பேச்சுவார்த்தையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.