முகப்பு
உலகம்

ஜப்பான்: உச்சம் தொட்ட வெப்பம்

கடந்த அக்டோபரில் ஜப்பான் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.

Updated On : 3 நவம்பர், 2024 at 12:43 AM
பகிர்:

கடந்த அக்டோபரில் ஜப்பான் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த அக்டோபரில் நாட்டின் சராசரி வெப்பநிலை, மற்ற அக்டோபா் மாதத்து சராசரி வெப்பநிலையைவிட 2.21 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. கடந்த 1898-இல் வெப்பநிலை பதிவு செய்யப்படத் தொடங்கியதிலிருந்து இதுவரை இவ்வளவு அதிக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டதில்லை.

மண்டவாரியாக, வடக்கு ஜப்பானில் 1.9 டிகிரி செல்ஷியஸும் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் 2.6 டிகிரி செல்ஷியஸும் மாதாந்திர சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. கியோட்டோ நகரில் அதிகபட்சமாக சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →