இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்நிலை தளபதி கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹஸன் நசரல்லா இஸ்ரேல் ராணுவத்தால் கடந்த செப்டம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைவராக நயீம் காஸிம் தலைமையேற்றார்.
கடந்த சில வாரங்களில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்நிலை தளபதி அபு அலி ரிதா இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இன்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. .
இஸ்ரேல் ராணுவத்தின் மீது ராக்கெட் தாக்குதல்கள் மற்றும் டேங்கர்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்களை செயல்படுத்துவது, ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது போன்ற பொறுப்புகளில் அபு அலி ரிதா செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு எதிராக காஸாவில் இஸ்ரேல் போரை நடத்திவருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலின் படைகளுக்கும் கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக எல்லை தாண்டிய மோதல்களுக்குப் பிறகு போர் தொடங்கியது. ஹிஸ்புல்லா அமைப்பினர் காஸாவில் உள்ள ஹமாஸுக்கு ஆதரவாக தினமும் வடக்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.