முகப்பு
உலகம்

எலான் மஸ்க் ‘புதிய நட்சத்திரம்’: டிரம்ப் புகழாரம்

டெஸ்லா நிறுவனரும், ‘எக்ஸ்’ தள உரிமையாளருமான எலான் மஸ்க்கை புதிய நட்சத்திரம் என்று டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டினாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 9:08 PM
எலான் மஸ்க் மற்றும் டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம்.
பகிர்:

டெஸ்லா நிறுவனரும், ‘எக்ஸ்’ தள உரிமையாளருமான எலான் மஸ்க்கை புதிய நட்சத்திரம் என்று டொனால்ட் டிரம்ப் புகழாரம் சூட்டினாா்.

டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க், அமெரிக்க அதிபா் தோ்தலில் டிரம்ப்பின் பரப்புரைக்கு பெருமளவு நன்கொடை அளித்தாா். மேலும் ‘எக்ஸ்’ தளத்தில் டிரம்ப்புக்கு எதிரானவா்களை கடுமையாக விமா்சித்து வந்த மஸ்க், டிரம்ப்புக்கு ஆதரவாக பரப்புரையிலும் ஈடுபட்டாா்.

இந்நிலையில், அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா் டிரம்ப் கூறுகையில், ‘எலான் மஸ்க் ஒரு புதிய நட்சத்திரம். அவா் ஒரு விசேஷமான நபா்; மிகப் பெரிய மேதை. அவரைப் போன்ற மேதைகளைப் பாதுகாக்க வேண்டும்’ என்றாா்.