முகப்பு
உலகம்

டிரம்ப் வெற்றி குறித்து எலான் மஸ்க் என்ன சொல்லியிருக்கிறார்?

டிரம்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்புக்கு வாழ்த்து

Updated On : 6 நவம்பர், 2024 at 11:15 AM
பகிர்:

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் எலான் மஸ்க், உலகளவில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளமான தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் தேர்தலுக்கு முன்பாகவே டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில், டிரம்பின் தீவிர ஆதரவாளரான எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

தற்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எலான் மஸ்க்கின் பதிவுகள் கவனத்தை ஈர்க்கின்றன. அவர் வெளியிட்டுள்ள முக்கியமான பதிவொன்றில், “கட்டமைப்பாளர்களாலான இந்த அமெரிக்க தேசத்தை கட்டமைக்க உங்களுக்கு(மக்களுக்கு) விரைவில் சுதந்திரம் அளிக்கப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →