டொனால்ட் டிரம்ப்புடன் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (கோப்புப் படம்) X | Awami League
உலகம்

டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த வங்கதேச முன்னாள் பிரதமர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப்புக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிரம்ப்புக்கு ஷேக் ஹசீனா வாழ்த்து கூறியுள்ளதாக அவாமி லீக் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். வாழ்த்துப்பதிவில் கூறியிருப்பதாவது, ``அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு வங்கதேச அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசினா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் மகத்தான தேர்தல் வெற்றி அவரது அசாதாரண தலைமைத்துவ குணங்களுக்கும், அமெரிக்க மக்கள் அவருக்கு வழங்கியுள்ள மகத்தான நம்பிக்கைக்கு சான்றாகும் என்று ஹசீனா கூறினார்.

டிரம்ப்பின் தலைமையின்கீழ், வங்கதேசம் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று ஹசீனா நம்பிக்கை தெரிவித்தார். அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியை கிடைக்க ஹசீனா வாழ்த்தினார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மெர், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்டோரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரிய வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குளித்தலை பகுதியில் தொடா் மழை நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிா்கள்: நிவாரணத்தை எதிா்நோக்கியிருக்கும் விவசாயிகள்

போலி ஆவணங்கள்: வெளிநாடு செல்ல முயன்ற நபா் கைது

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

தோ்தல் புறக்கணிப்பு சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை தேவை

SCROLL FOR NEXT