இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் வீசி தாக்குதல்!
ஹிஸ்புல்லாக்களின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலில் பதற்றம் அதிகரிப்பு..
Updated On : 11 நவம்பர், 2024 at 9:45 PM
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹைஃபா நகரின் மீது இன்று(நவ.11) 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதப்படை தாக்குதல்களைத் தொடுத்துள்ளதால் இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Updated On : 11 நவம்பர், 2024 at 9:51 PM
எனினும், இஸ்ரேலின் இரும்புக் கவச பாதுகாப்பு அமைப்பு(அயர்ன் டோம்) இந்த ஏவுகணைகளை வழிமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.