தாஹியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சூழ்ந்த கரும்புகை IANS
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி 3 பேர் கொலை!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் தளபதிகளான 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

DIN

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் தளபதிகளான 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனை இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகேவுள்ள தாஹியா மாவட்டத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் நள்ளிரவில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களின் நிலைகள், ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்டவற்றைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் குடிமக்களுக்கு எதிராக தெற்கு லெபனானில் இருந்து தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா குழுக்களின் செயல்பாடுகளை முறியடிக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

3 தளபதிகள் கொலை

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் டேங்கர் தாக்குதல் படை தளபதியான அய்மன் முஹம்மது நபுல்சி கொல்லப்பட்டார். தெப்னித் பகுதியில் ஹிஸ்புல்லா குழுவின் தளபதியாக செயல்பட்ட ஹஜ் அலி யூசுப் சலா மற்றும் ஹஜிர் பகுதி தளபதியும் கொல்லப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் கஹ்யிம் பகுதி தளபதி முஹம்மது மூசா சாலாஹ் கொல்லப்பட்ட்டார். ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலில் 2500க்கும் அதிகமான ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதற்கு முஹம்மது மூசா மூளையாகச் செயல்பட்டார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் எண்ணற்ற ஆயுதங்களையும் உற்பத்தி மையங்களையும் தாஹியா பகுதியில் நிறுவியுள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தாஹியா பகுதியைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாக் குழுக்களின் உற்பத்தி மையங்கள், ஆயுதக் கிடங்குகள், ஆயுதங்கள் சரிபார்ப்பு மையங்கள் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | புக்கர் பரிசை வென்றார் சமந்தா.! விண்வெளிசார் நூலுக்கு முதல்முறையாக புக்கர் பரிசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தியமங்கலம் அருகே விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து

பவானியில் வடிகால், கான்கிரீட் சாலை அமைக்க பூமிபூஜை

ரயிலில் இருந்து தவறிவிழுந்த பயணியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு

கனரக வாகனங்களை புறவழிச்சாலையில் இயக்க பாமக கோரிக்கை

மருத்துவக் கலந்தாய்வு: 7.5% உள் ஒதுக்கீட்டில் 613 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT