அநுரகுமார திசாநாயக  PTI
உலகம்

இலங்கை தேர்தல்: வெற்றியை நோக்கி அநுரகுமார திசாநாயக!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி...

DIN

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 97 இடங்களில் முன்னிலை பெற்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராக பொறுப்பேற்ற அநுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவுள்ளது.

இலங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றன.

காலை 9.30 மணி நிலவரப்படி, தேசிய மக்கள் சக்தி 97 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 26 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இலங்கை தமிழ் அரசு கட்சி - 3 புதிய ஜனநாயக முன்னணி - 2 இடங்களிலும் முன்னிலை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தேசிய மக்கள் சக்தி 61.63 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 17.8 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னா் நடைபெற்ற இந்தத் தோ்தலில், 65 சதவீதம் போ் வாக்களித்திருக்கக் கூடும் என்று தோ்தல் ஆணையம் கணித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற மொத்தமுள்ள 225 இடங்களில் 113 இடங்களை கைப்பற்ற வேண்டும்.

இந்தத் தோ்தலில் அதிபா் அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று வலுவான நாடாளுமன்றம் அமைந்தால்தான், தனது ஊழல் தடுப்பு சீா்திருத்த திட்டத்தை அமல்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT