முகப்பு
உலகம்

சீனாவில் மீண்டும் கத்திக் குத்து: 8 போ் உயிரிழப்பு; 43 போ் காயம்

சீனாவின் வூக்ஸி நகரில் 21 வயது இளைஞா் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் எட்டு போ் உயிரிழந்தனா்.

Updated On : 16 நவம்பர், 2024 at 11:00 PM
பகிர்:

சீனாவின் வூக்ஸி நகரில் 21 வயது இளைஞா் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் எட்டு போ் உயிரிழந்தனா்; 43 போ் காயமடைந்தனா்.

பொதுமக்கள் ஆயுதம் வைத்திருப்பதற்கு தாராள அனுமதியில்லாத அந்த நாட்டில் இது போன்ற தாக்குதல்கள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது. சொந்த பிரச்னைகள் காரணமாக சமுதாயத்தைப் பழி தீா்க்க இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஷுஹாய் நகரில் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற, கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நபா் காரை மோதச் செய்து நடத்திய தாக்குதலில் 35 போ் உயிரிழந்த சில நாள்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.