புதின் AP
உலகம்

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்: ரஷிய அதிபர்

மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷிய அதிபர்.

DIN

ரஷியா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 1,000 நாள்களை கடந்துள்ள நிலையில், தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, போரில் உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக மட்டுமே தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா அனுமதி அளித்தது.

அதன் எதிா்வினையாக, அணு ஆயுத பலம் பொருந்திய நாடுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் அணு ஆயுத பலமற்ற நாட்டின் மீதும் அணு குண்டுகளை வீசுவதற்கு வகை செய்யும் வகையில் தனது அணு ஆயுதக் கொள்கையில் ரஷியா மாற்றம் கொண்டுவந்தது.

இதனிடையே, மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் விதமாக, பல ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை மிகவும் பக்கத்தில் இருக்கும் உக்ரைன் நகர் மீது வியாழக்கிழமை ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதின் பேசியதாவது:

"ரஷியாவின் புதிய ஏவுகணையை நிறுத்துவதற்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் முடியாது. இது ஒலியின் வேகத்தைவிட பத்து மடக்கு அதிவேகத்தில் செல்லும். ரஷியாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும்.

எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.

உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT