வெள்ளை மாளிகை 
உலகம்

இந்தியாவுடனான உறவு அதானி விவகாரத்தை தொடர உதவும்! வெள்ளை மாளிகை

அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் கருத்து..

DIN

அமெரிக்கா - இந்தியாவுக்கு இடையேயான வலுவான உறவு அதானி மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து வழிநடத்த உதவும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத் துறையின் செயலர் கரீன் ஜீன்-பியர் பேசியதாவது:

“அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் அறிவோம். அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அம்சங்கள் குறித்து பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித்துறையினர் தெரிவிப்பர்.

நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வலுவான அடித்தளம் கொண்டது. இரு நாட்டு மக்களையும் நல்ல உறவில் உள்ளனர். உலகளாவிய பிரச்னைகளில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே, இந்த விவகாரத்தை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரத்தை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித்துறை நேரடியாக கவனிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது வாரண்ட் குறித்து பேசுகையில்,

“மூத்த இஸ்ரேல் தலைவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த கைது வாரண்டை நிராகரிக்கிறோம். இந்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் ஒருங்கிணைந்து முடிவெடுப்போம்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT