இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு 
உலகம்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 31 ஆக உயர்ந்த பலி!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை உயர்வு..

DIN

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு சுமத்ரா தீவில் கடந்த ஒரு வாரக் காலமாகக் கனமழை பெய்து வருகின்றது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள டோன் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சுற்றுலாப் பேருந்து ஒன்றின் மீது மரங்கள், மண், பாறைகள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன பலரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் பருவமழையில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. குறிப்பாக வடக்கு சுமத்ரா போன்ற தாழ்வான மற்றும் அடத்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.

இந்த வார தொடக்கத்தில் வடக்கு சுமத்ரா மாகாணத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT