குண்டுவெடிப்பில் சூழ்ந்த கரும்புகை AP
உலகம்

இஸ்ரேலுக்கான விமான சேவை: தொடரும் தற்காலிகத் தடை!

போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

லெபனான், ஏமன் ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாட்டிற்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அதனை நீட்டிப்பதாக ஐரோப்பிய ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் உள்ள பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலில் போர் பதற்றம் நீடித்துவருவதால், விமான சேவையை சில நாடுகள் நிறுத்திவைத்திருந்தன.

ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனம், ஸ்விட்சர்லாந்தின் சுவிஸ் சர்வதேச விமான நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

இதோடு மட்டுமின்றி போலந்து, ஹங்கேரி, நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.

இந்நிலையில் இஸ்ரேலுக்கான விமான சேவை நிறுத்தத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு நிதியுதவி

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிக்கை!

கல்வி உதவித்தொகை பெற உயா்தர கல்வி பயிலும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவா் சரண்

SCROLL FOR NEXT