ஹூதிக்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஏவுகணையின் ஒரு பகுதி 
உலகம்

நெதன்யாகு விமானத்தைச் சுட்டோம்! ஹூதிக்கள் தகவல்

நெதன்யாகு விமானத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ஏமனின் ஹூதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

DIN

ஏமன், லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி அமைப்பினர் இஸ்ரேல் பிரதமர் அமெரிக்காவிலிருந்து திரும்புகையில் அவரது விமானத்தைத் கண்காணித்து தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் கடந்த செப். 28 அன்று நடைபெற்றது. இது தொடர்பாகப் பேசிய ஹூதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நஸ்ருதீன் அமர் ”இஸ்ரேலுக்கு இந்தச் செய்தியை உணர்த்த நெதன்யாகு தரையிறங்கும்போது வேண்டுமென்றே பென் குரியன் விமான நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் திட்டமிட்டு அதனை நிகழ்த்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஹூதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நஸ்ருதீன் அமர்

"நாங்கள் எந்த வகையான தாக்குதலை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம். மேலும், எங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குஅச்சப்படமாட்டோம்” என்று அவர் தங்கள் அமைப்பின் நிலைப்பாட்டைக் குறிப்பிட்டார்.

மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஹூதி அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

இந்த ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி பாதுகாப்புப் படை தடுத்து நிறுத்தியது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏமனின் ஹூதி அமைப்பினர் 220 ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேலில் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT