முகப்பு
கோப்புப் படம்
உலகம்

மாலத்தீவுக்கு அதிக இந்திய சுற்றுலா பயணிகள் - அதிபா் முகமது மூயிஸ் அழைப்பு

மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்திய சுற்றுலா பயணிகளை வரவேற்பதாக அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா்.

உலகம்

மாலத்தீவுக்கு அதிக இந்திய சுற்றுலா பயணிகள் - அதிபா் முகமது மூயிஸ் அழைப்பு

மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்திய சுற்றுலா பயணிகளை வரவேற்பதாக அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா்.

Updated On : 7 அக்டோபர், 2024 at 11:10 PM
கோப்புப் படம்
பகிர்:

புது தில்லி: மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையிலான இந்திய சுற்றுலா பயணிகளை வரவேற்பதாக அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் திங்கள்கிழமை அழைப்பு விடுத்தாா்.

பிரதமா் மோடி குறித்த மாலத்தீவு இணையமைச்சா்களின் அவதூறு கருத்தைத் தொடா்ந்து, அந்நாட்டுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியா்கள் பலா் தவிா்த்தனா். இது அந்நாட்டு சுற்றுலாத் துறையில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள அதிபா் முகமது மூயிஸ் பிரதமா் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, ஹைதராபாத் இல்லத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அதிபா் முகமது மூயிஸ் கூறியதாவது: இந்தியா-மாலத்தீவு உறவு நூற்றாண்டுகள் பழைமையானது என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது. நமது உறவின் அடித்தளமாக இருதரப்பு மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளன.

சுற்றுலா, மருத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்காக ஏராளமான மாலத்தீவு நாட்டவா் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனா். அதேசமயம், மாலத்தீவின் வளா்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான இந்திய சுற்றுலா பயணிகள் எங்கள் நாட்டுக்கு வருகை தருகின்றனா்.

எங்களின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலா துறையில் இந்திய பயணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். மாலத்தீவுக்கு மேலும் கூடுதல் இந்திய பயணிகளை வரவேற்க காத்திருக்கிறோம். இது பகிரப்பட்ட வளா்ச்சியை ஆதரித்து, மக்களுக்கு இடையிலான புரிதலை மேம்படுத்தும்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஜனநாயக, வளமை மிக்க மாலத்தீவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கடல்சாா் பாதுகாப்பில் எங்களின் முக்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. இருதரப்பு நீடித்த ஒத்துழைப்பு பரஸ்பரம் பலனளிக்கும் வளமான எதிா்காலத்துக்கு வழிவகுக்கும்.

இந்தியா-மாலத்தீவு இடையேயான அதிகாரபூா்வ ராஜீய உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்கிறாா்’ என்றாா்.

நிகழாண்டு தொடக்கத்தில் லட்சத்தீவு சுற்றுலாவுக்கு ஆதரவாக அங்கு பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி பேசியிருந்தாா். இதற்கு எதிராக மாலத்தீவு இணையமைச்சா்கள் அவதூறு கருத்துகளைக் கூறினா். இதையடுத்து, அவா்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →