முகப்பு
உலகம்

ஜெய்சங்கரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது: இலங்கை

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத் தெரிவித்தாா்.

Updated On : 8 அக்டோபர், 2024 at 7:42 PM
பகிர்:

இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத் தெரிவித்தாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை திவால் அடைந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்தது.

இது பிற நாடுகள் மற்றும் சா்வதேச வங்கிகளிடம் இருந்து புதிதாக கடன் பெற முடியாத நிலையை இலங்கைக்கு ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா, சீனா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் நீண்ட பேச்சுவாா்த்தைக்குப் பின்னா், இலங்கைக்கும் அந்நாட்டுக்கு கடன் அளித்தவா்களுக்கும் இடையே கடந்த ஜூலையில் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை ஏற்பட்டது.

இந்நிலையில் இலங்கை அதிபராக அநுரகுமார திசாநாயக தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா், அந்நாட்டுக்கு முதல் வெளிநாட்டு முக்கியஸ்தராக கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி அமைச்சா் ஜெய்சங்கா் பயணம் மேற்கொண்டாா்.

அவரின் வருகை தொடா்பாக அந்நாட்டு தலைநகா் கொழும்பில் இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இலங்கையின் சா்வதேச கடன் பத்திரங்களை வைத்திருப்போருடன் கடன் மறுசீரமைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததில் ஜெய்சங்கரின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. இலங்கையில் அதானி முதலீட்டு திட்டங்கள் உள்பட இந்திய திட்டங்கள் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசிக்கப்படவில்லை’ என்றாா்.

முன்னதாக இலங்கையில் தனது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னணி ஆட்சிக்கு வந்தால், அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அதிபா் அநுரகுமார திசநாயக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →