நைஜீரியாவில் வெடித்து விபத்துக்குள்ளான டேங்கரின் ஒரு பகுதி AP
உலகம்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்து: 94 பேர் பலி

கவிழ்ந்த டேங்கரில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க ஏராளமானோர் குவிந்தபோது வெடித்துச் சிதறியது.

DIN

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வெளியேறிய பெட்ரோலை அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சேகரிக்கச் சென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 94 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் அதிகமானோர் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

பெட்ரோல் எடுக்கச்சென்றபோது விபரீதம்.

நள்ளிரவு ஏற்பட்ட இந்த விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியுள்ளது. அருகிலிருந்த மக்கள் டேங்கர் லாரியில் கசிந்த பெட்ரோலை சேகரித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியதால், டேங்கர் லாரி தீப் பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் 94 பேர் இதுவரை உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் மிகப்பெரிய தோல்வியடைந்ததால், சாலைமார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | இஸ்ரேல் தாக்குதல்: தெற்கு லெபனானில் 15 பேர் பலி!

2020 ஆம் ஆண்டில் மட்டும் 1531 டேங்கர் லாரி விபத்துகள் நேரிட்டுள்ளன. இதில் 535 விபத்துகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 1,142 விபத்துகளில் படுகாயங்களுடன் தப்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தானே கோரிக்கை விடுத்தது’: மாநிலங்களவையில் மத்திய அரசு மீண்டும் தகவல்

நாகா்கோவிலில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் நிரம்பிய கழிவுநீா்: வழக்குரைஞா்கள் சாலை மறியல்

பேச்சிப்பாறை அருகே பழங்குடியின மக்கள் குடியிருப்பில் யானை அட்டகாசம்

குமரி மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT