விக்ரம் மிஸ்ரி  கோப்புப் படம்
உலகம்

இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள்: வெளியுறவுச் செயலா்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை எடுத்துரைத்தது

Din

இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை எடுத்துரைத்தது. அப்போது இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள் வசிப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டது.

இதுதொடா்பாக விக்ரம் மிஸ்ரி தலைமையிலான குழு எடுத்துரைத்த விளக்கக் காட்சியில், ‘மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவும் முன்பே இஸ்ரேலுடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 9,000 கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் 700 வேளாண் தொழிலாளா்கள் இஸ்ரேலுக்கு சென்றனா். அவா்களுடன் சோ்த்து மொத்தமாக 30,000 இந்தியா்கள் வசிக்கின்றனா். ‘ஆபரேஷன் விஜய்’ திட்டத்தின்கீழ் 1,300-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் மற்றும் சில நேபாளியா்கள் இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்டனா்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT