இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த ஈரானின் பார்ச்சின் ரகசிய ராணுவ தளத்தின் செயற்கைக் கோள் புகைப்படம். AP
உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் சேதமடைந்த ஈரானின் ரகசிய ராணுவ தளங்கள்!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஈரானின் பார்ச்சின் மற்றும் கோஜிர் பகுதிகளில் உள்ள ரகசிய இராணுவ தளங்கள் சேதமடைந்தன.

DIN

ஈரானின் தென்கிழக்கு தெஹ்ரான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய இராணுவ தளங்கள் சேதமடைந்தன.

இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ஆனால், சேதம் தொடர்பாக வெளியான செயற்கைக் கோள் படங்களின் மூலம் தாக்குதலின் பாதிப்பு தெரிய வந்துள்ளது.

ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக கடந்த காலத்தில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் சந்தேகித்த இடமான பார்ச்சினின் ராணுவ தளங்களில் உள்ள கட்டிடங்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் சேதப்படுத்தப்பட்டன.

அணு ஆயுத சோதனை குறித்து ஈரான் பல ஆண்டுகளாக மறுப்பு தெரிவித்தபோதிலும், சர்வதேச அணுசக்தி நிறுவனம் மற்றும் மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் தெஹ்ரானில் 2003 ஆம் ஆண்டு வரை அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டதாகக் கூறி வருகின்றனர்.

கோஜிர் இராணுவ தளத்தில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பு மற்றும் ஏவுகணை தயாரிப்பு தளங்களை ரகசியமாக செயல்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில் அங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வரை கோஜிர் மற்றும் பார்ச்சின் பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களை ஈரான் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அந்தத் தளங்களின் புகைப்படங்களும் ஈரான் ராணுவத்தினரால் வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT