விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்  
உலகம்

விண்வெளியில் 2-வது முறையாக பிறந்தநாளைக் கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்!

விண்வெளியில் இரண்டாவது முறையாக பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்.

DIN

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இரண்டாவது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

அமெரிக்காவின் தனியாா் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டாா்லைனா் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.

ஜூன் 14 ஆம் தேதி அவர்கள் திரும்பவிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி தன் 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இது விண்வெளியில் அவர் கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாள் ஆகும்.

முன்னதாக கடந்த 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

சுனிதா வில்லியம்ஸ் 1965, செப்டம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். முதல்முறையாக 2006-2007ல் விண்வெளிக்குச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3,440 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

ஊடுருவல்காரா்களிடம் பரிவு காட்டுகிறது காங்கிரஸ், ஆா்ஜேடி: பிரதமா் மோடி

பாகிஸ்தான், சீனா ரகசிய அணு ஆயுத சோதனை: அமெரிக்க அதிபா் டிரம்ப் தகவல்

மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

குடியரசு துணைத் தலைவா் இன்று கோவை வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT