காட்டுத் தீ 
உலகம்

பெருவில் காட்டுத் தீ: 15 பேர் பலி!

பெரு நாட்டில் உள்ள அமேசான் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் இதுவரை 15 பேர் உயிரிழப்பு..

ஐஏஎன்எஸ்

பெரு நாட்டில் உள்ள அமேசான் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

காட்டுத் தீயானது அந்த நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயில் சிக்கி காயமடைந்துள்ளனர். 3 ஆயிரம் ஹெக்டேர்களுக்கு மேல் பயிரிடப்பட்ட நிலம் மற்றும் இயற்கைப் பகுதிகள் கருகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் குஸ்டாவோ அட்ரியன்சென் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

24 மாகாணங்களில் இதுவரை 22ல் தீ விபத்து பரவியுள்ளது. தீயை அணைக்கக்கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த ஜூலை முதல் 15 பேர் இறந்துள்ளனர் மற்றும் மேலும் 100க்கும் மேற்பட்டோர் தீயினால் காயமடைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 10 பேர் இறந்தனர் மற்றும் 1,800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 334 கால்நடைகள் பலியாகியுள்ளனர் என்று தெரிவித்தார்.

பெருவின் தேசிய வன மற்றும் வனவிலங்கு சேவை, காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் தீ பரவுவதை எளிதாக்குகிறது. பலத்த காற்று, வறட்சியால் தாவரங்கள் வறண்டு எரியக்கூடிய எரிபொருளாக மாறுகிறது என்று காட்டுத் தீயைக் கண்காணிப்பதிலும் நிர்வகிப்பதிலும் நிபுணரான ரோமினா லிசா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT