எலான் மஸ்க் கோப்புப் படம்
உலகம்

எலானுக்கு 5 ஆண்டுகள் சிறையா? ஏன்?

அமெரிக்க அதிபர் மற்றும் துணையதிபர் குறித்த நகைச்சுவை பதிவால் சர்ச்சை

DIN

அமெரிக்க அதிபர் மற்றும் துணையதிபர் குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்துக்கு வெளியே, செப். 15 ஆம் தேதியில் இரண்டு நபா்களுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. அப்போது டிரம்ப் அந்த மைதானத்தில் இருந்துள்ளார்.

டிரம்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றபோதும், அவா் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம், எக்ஸ் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கிடம் பயனர் ஒருவர் ``டொனால்ட் டிரம்பை சிலர் ஏன் கொல்ல விரும்புகிறார்கள்?" என்று கேட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு பதிலளித்த எலான் மஸ்க், ``யாரும் பைடன் அல்லது கமலாவைக் கொல்ல முயற்சிக்கவில்லையா?’’ என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த இடுகையினுடன் கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடனின் பெயர்களையும் மேற்கோள்காட்டி இருந்தார்.

எலான் மஸ்கின் இந்த பதிவுக்கு பல்வேறான பயனர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருத்துகளைப் பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, தான் நகைச்சுவையாக பதிவிட்டதாகக் கூறிய எலான் மஸ்க், அப்பதிவினை நீக்கியும் விட்டார்.

மேலும், அமெரிக்க அதிபர் மற்றும் துணையதிபரை, வெளிப்படையாக அச்சுறுத்தியதற்காக எலான் மஸ்க் மீது 5 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக! Vijay பேச்சு

SCROLL FOR NEXT