படம் | பிடிஐ
உலகம்

இலங்கை அதிபர் தேர்தலில் அநுரகுமார திஸ்ஸநாயக வெற்றி - நாளை பதவியேற்பு!

இலங்கை அதிபராகும் அநுரகுமார திஸ்ஸநாயக..!

DIN

இலங்கையின் 9-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிவரும் நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நள்ளிரவு 12 மணிமுதல் எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளின் முடிவில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை பணி இன்று(செப்.22) பகல் நடைபெற்றது. அதில் 56 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற்றுள்ளார் அநுரகுமார திஸ்ஸநாயக.

இதன்மூலம், முக்கிய எதிா்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தி தலைவா் சஜித் பிரேமதாசவைவிட 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளார். இதையடுத்து அநுரகுமார திஸ்ஸநாயக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திங்கள்கிழமை(செப்.23) எளிமையான முறையில் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும், அதில் அநுரகுமார திஸ்ஸநாயக இலங்கை அதிபராக பதவியேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்ட நிலையில், தோ்தல் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையர் ஞாயிற்றுக்கிழமை (செப். 22) இரவு செய்தியாளர்களுடன் பேசவுள்ளார் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT