அமெரிக்காவின் நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது இந்தியா-பாலஸ்தீன இருத்தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இருத் தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர். மேலும் இந்த சந்திப்பின்போது பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதியளித்த பிரதமர் மோடி, காஸா-இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தினார்.
‘க்வாட்’ உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை (செப். 21) சென்றடைந்தார். மாநாட்டின் ஒரு பகுதியாக டெலாவா் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் அதிபா் ஜோ பைடனை சனிக்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அமெரிக்க அதிபரைத் தொடா்ந்து, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.