பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் 
உலகம்

ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து!

ஹெலிகாப்டர் கடலில் விழுந்ததில் 3 பேர் பலி.

DIN

ஜப்பானில் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

நாகாசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கடலில் விழுந்ததாகக் கூறப்படுகின்றது.

கடலோர காவல்படையினர் இரு விமானங்கள், 3 கப்பல்களை அனுப்பி கடலில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 66 வயதான ஹெலிகாப்டர் பைலட், உதவியாளர், மருத்துவப் பணியாளர் ஆகியோர் இந்த விபத்தில் கடலோர காவல்படையினரால் காப்பாற்றப்பட்டனர்.

காப்பாற்றப்பட்ட மூவருக்கும் ஹைபோதெர்மியா எனப்படும் உடல் வெப்பநிலை குறைபாடு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதில், தலைமை மருத்துவர், நோயாளி, பணியாளர் என 3 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்திற்கான உண்மையான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செஞ்சூடு, தொந்தரவு இல்லை... அமைரா தஸ்தூர்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

புதுக்கோட்டை அருகே சாலையில் தரையிறங்கிய பயிற்சி விமானம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தீபாவளி படங்கள்!

நவ.17ல் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT