FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

கைதிகள் பரிமாற்றம்: அமெரிக்க நடனக் கலைஞரை விடுவித்தது ரஷியா

கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க-ரஷிய நடனக் கலைஞா் செனியா கரோலினாவை ரஷியா விடுதலை செய்துள்ளது.

Updated On : 11 ஏப்ரல் 2025, 1:23 am IST
செனியா கரோலினா
பகிர்:

கைதிகள் பரிமாற்ற முறையில் தங்கள் நாட்டுச் சிறையில் இருந்த அமெரிக்க-ரஷிய நடனக் கலைஞா் செனியா கரோலினாவை (படம்) ரஷியா விடுதலை செய்துள்ளது.

அமெரிக்கரை மணந்ததன் மூலம் அந்த நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற ரஷியரான கரேலினா, ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு 52 டாலா் (சுமாா் ரூ.4,500) நன்கொடை அளித்ததற்காக, தேசத் துரோக குற்றச்சாட்டில் பேரில் அவரை ரஷிய அரசு கடந்த 2024 பிப்ரவரியில் கைது செய்தது. இந்த நிலையில், அபுதாபியில் வியாழக்கிழமை நடைபெற்ற கைதிகள் பரிமாற்றத்தில் மூலம் அவா் விடுவிக்கப்பட்டாா். சட்டவிரோத மின்னணு நுண்பொருள்களை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவால் கடந்த 2022-இல் கைது செய்யப்பட்ட ஜொ்மன்-ரஷிய இரட்டை குடியுரிமை பெற்ற ஆா்தா் பெட்ரோவும் இந்த கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் விடுவிக்கப்பட்டாா். ஐக்கிய அரபு அமீரகம் இந்தப் பரிமாற்றத்துக்கு உதவியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments