காஸாவின் அல்-அஹில் அரபு மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த பகுதி 
உலகம்

காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.

DIN

காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் அல்-அஹில் அரபு மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.

இதில் சிறுவா்கள் உள்பட 21 போ் உயிரிழந்தனா்.இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 50,983 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 1,16,274 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தாா் நாடுகள் மேற்கொண்டுவந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஜன. 19 முதல் ஆறு வாரங்களுக்கு போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அது நீட்டிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT