குருத்தோலை ஞாயிறு நாளில் உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படும் காட்சி AP
உலகம்

உக்ரைனில் ஈஸ்டர் நாளில் மட்டும் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் திடீர் அறிவிப்பு!

ஈஸ்டர் நாளில் உக்ரைனில் சண்டை நடைபெறாது - ரஷிய அதிபர்

DIN

மாஸ்கோ: ஈஸ்டர் நாளில் உக்ரைனில் சண்டை நடைபெறாது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

3 ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷிய அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இன்று(ஏப். 19) மாலை 6 மணிமுதல்(ரஷிய நேரப்படி) ஞாயிற்றுக்கிழமை(ஏப். 20) நள்ளிரவு 12 மணிவரை ‘ஈஸ்டர் ட்ரூஸ்’, அதாவது ரஷிய தரப்பிலிருந்து தற்காலிக போர் நிறுத்தம் நிலவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷியாவை போலவே உக்ரைன் தரப்பும் இந்த காலகட்டத்தில் சண்டையில் ஈடுபடக் கூடாது என்பதை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் ரஷிய மாளிகை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியை சந்தித்து பரிசளித்த இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்!

மே.இ.தீவுகள் பயிற்சியாளர், கேப்டனிடம் தனித்தனியாக பேசிய பிரையன் லாரா!

கருப்பு முதல் பாடல் அப்டேட்!

கொளத்தூரில் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இருப்பாரா? -நயினார் நாகேந்திரன் பதில்

SCROLL FOR NEXT