எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமென டிரம்ப் மட்டுமே கூறுகிறார்! - ரஷிய அரசு விமர்சனம்!
எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமென அமெரிக்க அதிபர் மட்டுமே கூறுவதாக ரஷிய அரசு விமர்சனம்...
ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே கூறுகிறார் என ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் விமர்சித்துள்ளார்.
ரஷியாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தி, வெனிசுவேலா மற்றும் அமெரிக்காவிடம் இனி இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வரிகள், தடைகள் உள்பட பல்வேறு கட்டாய நடவடிக்கைகள் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்க அரசு தடுக்க முயற்சிப்பதாக, ரஷியா குற்றம்சாட்டியது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ரஷிய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் மட்டுமே கூறி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
”ரஷியாவின் எண்ணெயை இனி வாங்குவதில்லை என இந்தியா ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததாகக் குறிப்பிட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களிடம் இருந்து இதுபோன்ற அறிக்கையை நான் பெறவில்லை” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், கடந்த 2025 டிசம்பர் மாதம் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாக, ரஷிய அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
Russian Foreign Minister Sergei Lavrov has said that Donald Trump is the only one who says that India will stop buying oil from Russia.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.