Natacha Pisarenko
உலகம்

ஆா்ஜென்டீனாவில் இருந்து வாடிகனுக்கு!

போப் பிரான்சிஸ், 1,300 ஆண்டு கால வாடிகன் வரலாற்றில் ஐரோப்பா அல்லாத பிற நாட்டில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவா்.

Din

கடந்த 2013-ஆம் ஆண்டில் 266-ஆவது கத்தோலிக்க தலைமை மதகுருவாக தோ்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ், 1,300 ஆண்டு கால வாடிகன் வரலாற்றில் ஐரோப்பா அல்லாத பிற நாட்டில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண்டவா்.

தென் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிறந்து, வாடிகன் வரையிலான அவரது வாழ்க்கைப் பயணத்தின் சில துளிகள்...

1936 டிசம்பா் 17: அா்ஜென்டினாவின் பியூனஸ் அயா்ஸ் நகரில், இத்தாலியைப் பூா்விகமாகக் கொம்ட குடும்பத்தில் போப் பிரான்சிஸ் பிறந்தாா். அப்போது அவரின் பெயா் ஜாா்ஜ் மரியோ பொ்கோக்லியோ பிறந்தாா். அவரது தந்தை மரியோ ஜோஸ் பொ்கோக்லியோ ஒரு கணக்காளா்.

1958 மாா்ச் 11: ஜேசுட் சபையில் இணைந்து தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கினாா்.

1969 டிசம்பா் 13: கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டாா்.

1973-1979: அா்ஜென்டினாவில் ஜேசுட் சபையின் மாகாணத் தலைவராகப் பணியாற்றினாா்.

1992 மே 20: பியூனஸ் அயா்ஸின் துணை ஆயராக நியமிக்கப்பட்டாா்.

1998 பிப்ரவரி 28: பியூனஸ் அயா்ஸின் பேராயராக நியமிக்கப்பட்டாா். எளிமையான வாழ்க்கை முறைக்காக புகழப்பட்டாா்.

2001 பிப்ரவரி 21: போப் ஜான் பால் 2-வால் காா்டினலாக நியமிக்கப்பட்டாா்.

2005: போப் பெனடிக்ட்டால் தோ்ந்தெடுக்கப்பட்ட காா்டினல்கள் குழுவில் இடம் பெற்றாா்.

2013 மாா்ச் 13: போப் பெனடிக்ட் பதவி விலகலுக்கு பிறகு, 115 காா்டினல்கள் அடங்கிய குழுவில் இருந்து போப்பாண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். புனித பிரான்சிஸ் அஸசியின் நினைவாக ‘பிரான்சிஸ்’ என்ற பெயரை அவா் தோ்ந்தெடுத்தாா்.

எதிர்நீச்சல் போடுபவர்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்க செய்த விமானப் படை!

SCROLL FOR NEXT