கோப்புப் படம் 
உலகம்

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய வீரர்கள்: உறுதி செய்தது ரஷியா!

உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரிய வீரர்கள் ஈடுபட்டதை ரஷியா உறுதி செய்துள்ளதைப் பற்றி...

DIN

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்கள் ஈடுபட்டதை ரஷிய ராணுவம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தப் போரில் ரஷியா படைகளுடன் இணைந்து வடகொரியா மற்றும் சீனாவின் வீரர்கள் உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வருவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய வீரர்களுடன் இணைந்து வடகொரிய வீரர்கள் சண்டையிட்டதாக ரஷிய ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி கெராசிமோவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைனின் படையெடுப்பை முறியடிக்க ரஷிய வீரர்களுடன் தோளோடு தோள் நின்று வடகொரிய வீரர்கள் சண்டையிட்டனர் என உறுதி செய்த வலேரி கொராசிமோவ், வடகொரிய வீரர்கள் போரில் திறன்பட செயல்பட்டதாகப் புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரான்: கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து; 516 பேர் காயம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல்: விடைபெற்றாா் அஸ்வின்

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’ - பதக்க வாய்ப்பை இழந்தாா் குகேஷ்

2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

SCROLL FOR NEXT