2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், ஜூலை மாத இறுதியில் ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் சுனாமி ஏற்பட்டது மக்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில், அதே வேளையில், துல்லியமாக, உலக நிகழ்வுகளை, அபாயங்களை முன்கணித்து வருகிறார்.
ரஷியாவின் காம்சட்கா தீபகற்பத்தை புதன்கிழமை கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 8.8 அலவுகோளில் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி, ஜப்பானின் வடக்குக் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது.
கடந்த ஆண்டுகளில் பதிவான மிக மோசமான நிலநடுக்கமாக இது அமைந்திருந்தது. ரஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஜாப்பானில் சுனாமி தாக்கியதன் மூலம், புதிய பாபா வங்காவின் சுனாமி கணிப்பு, உண்மையாகியிருக்கிறது என்று மக்கள் கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஜப்பானைச் சேர்ந்தவர் ரையோ தத்சுகி. தற்போது புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார். ஓவியம் வரையும் நிபுணத்துவம் பெற்ற இவர், 2021ஆம் ஆண்டு முதல் தனது கனவில் வரும் சில நிகழ்வுகளை வரைந்து, அதில் தெரிய வரும் தகவல்களை கணிப்புகளாக வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும் இவை உண்மையில் நடந்தும் இருப்பதால், இவரை புதிய பாபா வங்கா என்கிறார்கள் ஜப்பான் மக்கள்.
இவர் ஏற்கனவே தனது கனவில் வந்தததை ஓவியமாக வரைந்து உருவாக்கிய முன்கணிப்புகளில், 2011 நிலநடுக்கம், பிரின்ஸ் டயானா மரணம், கரோனா பேரிடர் போன்றவை உண்மையில் நடந்திருப்பதால் கடந்த ஜூலை மாதம் சுனாமி தாக்கும் என்ற கணிப்பால் மக்கள் அச்சத்துடன் இருந்தனர். அது நடந்தும் விட்டது.
இது மட்டுமல்லாமல் அடுத்த 2030ஆம் ஆண்டில் கரோனா போன்ற பெருந்துயரம் மீண்டும் வரும் என்றும் அவர் கணித்துள்ளார்.
அவர் அண்மையில் வெளியிட்ட கணிப்பில், ஜூலை 5ஆம் தேதி பேரழிவு காத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அது இணையத்தில் வைரலாகி, மக்கள் மிகுந்த கலக்கத்தில் இருந்தனர். அந்த நாளில் மற்றும் வாரத்தில் ஜப்பானுக்குச் செல்லும் விமானங்களில் முன்பதிவுகள் குறைந்தன. ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தவர்களும் ரத்து செய்தனர்.
மங்கு கலை ஓவியராக உலகுக்கு அறிமுகமான ரையோ, தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரையத் தொடங்கினார். அவர் 1980 முதல் தனது கனவுகளை வரையத் தொடங்கி, அது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது. படிப்படியாக, அவர் கனவில் வரும் நிகழ்வுகள் வருங்காலத்தில் நடப்பதை அவர் உணரத் தொடங்கினார்.
அவரது ஓவியங்களை பலரும் கவனித்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உலகில் நடந்த சம்பவங்களோடு ஓவியங்கள் ஒத்துப்போவதை கண்கூடாகப் பார்த்தும் வருகிறார்கள்.
அந்த வகையில்தான் தற்போது மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் கணித்தது போல, சுனாமி ஜப்பானைத்தாக்கியிருப்பது மக்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.
ஏற்கனவே 1991 ஃபிரெட்டி மெர்குரியின் மரணம், 1995 கோபே நிலநடுக்கம், 2011ஆம் ஆண்டு ஜப்பானின் சுனாமி போன்றவற்றை அவர் துல்லியமாக வரைந்திருந்ததை நினைவுகூர்கிறார்கள். அதன்பிறகே, அவரை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக உலகம் அங்கீகரித்து அதன் தொடர்ச்சியாக அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உள்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.