ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்). 
உலகம்

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

ரஷியாவுக்கு டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷிய எல்லையில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷியா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்து வருகின்றது. ரஷியாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது.

டிரம்பின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தால் இந்தியாவுக்கு 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இந்தியா மற்றும் ரஷியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்கள் என்று டிரம்ப் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், டிரம்பின் கருத்தை ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெட்வெடே கடுமையாக விமர்சித்திருந்தார்.

“இந்தியா, ரஷியா பொருளாதாரங்கள் பற்றி பேசுவதற்கு முன்னதாக ’டெட்ஹேண்ட்’ எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றி டிரம்ப் யோசித்துப் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “ரஷியாவுக்கு 50 நாள்கள், 10 நாள்கள் எனக் கெடு விதிக்கும் விளையாட்டை டிரம்ப் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். ரஷியா இஸ்ரேலோ ஈரானோ கிடையாது. ஒவ்வொரு இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தலாகும். போரை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ரஷியா - உக்ரைன் இடையே அல்ல, அவரது சொந்த நாட்டுடன்.” என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”ரஷியாவின் முன்னாள் அதிபரும் தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷியாவுக்கு பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்.

வார்த்தை மிகவும் முக்கியமானவை. அவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

டெட் ஹேண்ட் என்பது பனிப்போர் காலத்தில் ரஷியாவால் உருவாக்கப்பட்டது. ரஷியாவை தாக்க முயற்சித்தால் தானாகவே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

US President Donald Trump on Friday ordered the deployment of two submarines to the Russian border.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT