FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளதைப் பற்றி...

Updated On : 22 பிப்ரவரி 2026, 8:50 am IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - படம்: ஏபி
பகிர்:

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான பரஸ்பர வரியை 10-லிருந்து 15 சதவிகிதமாக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அதிரடி பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அறிவித்திருந்தது செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருள்கள் மீது 10 சதவிகித வரி விதிக்கும் புதிய பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கையொப்பமிட்டார்.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 10 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தி அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

ரஷியா - உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதே முதன்மைக் காரணம் என கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 25 சதவிகித பரஸ்பர வரியையும் அதன்பின்னர், 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார். இது இந்திய சந்தையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.

இந்த கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரஷியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி 40.48 சதவிகிதம் குறைந்தது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 4.81 பில்லியன் டாலர்களாக இருந்த இறக்குமதி, இந்தாண்டு ஜனவரியில் 2.86 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய டிரம்ப், இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவிகித வரியை ரத்து செய்துவிட்டு, 18 சதவிகிதம் மட்டும் வரி விதிக்கப்படும் என்று பிப். 7 ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்ற நேற்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு தற்காலிகமாக 150 நாள்கள் மட்டுமே செல்லும் சட்டத்தைப் பயன்படுத்தி நேற்று அனைத்து நாடுகளுக்கும் 10 சதவிகித வரியை மீண்டும் 15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது நான் விதித்த வரிகள் செல்லாது என்று அமெரிக்காவுக்கு விரோதமான, மோசமான தீா்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் வழங்கியது என்றும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார் டிரம்ப்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது நான் விதித்த 10 சதவிகித வரியை 15 சதவிகிதமாக அதிகரிக்க விரும்புகிறேன் என டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 150 நாள்கள் கெடுவிற்குள் இந்த வரியை சட்டபூர்வமாக நடவரிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

summary

President Donald Trump on Saturday announced that he will raise a temporary tariff on US imports from all countries from 10% to 15%, a day after the US Supreme Court ruled against his signature tariff program based on an economic emergency law.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments