புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகம் முழுவதும் இந்தியா - பாகிஸ்தான் உள்பட ஐந்து போர்களை தானே மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
தன்னுடைய ட்ரூத் எனப்படும் சமூக வலைத்தளத்தில் இது பற்றி டிரம்ப் கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.
உலகில் வெறும் ஐந்து போர்களை நிறுத்தியிருக்கிறேன், அதில், 31 ஆணடுகளாக நீடித்து வரும் காங்கோ - ரூவாண்டா நாடுகளுக்கு இடையேயான போரும் உள்ளடக்கம். இந்த போரில் மட்டும் இதுவரை 70 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். போர் நிறுத்தப்படுவதற்கான தடயமே இல்லாமல் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வானொலி தொகுப்பாளர் ஒருவரின் பேச்சுக்கு பதிலளித்து டிரம்ப் தெரிவித்திருக்கும் பதிவில், அவருக்குத் தெரிந்திருக்கவில்லை, இந்தியா - பாகிஸ்தான் அல்லது ஈரானின் அணுசக்தி திறன் பற்றியோ அல்லது எல்லையை மூடியது பற்றியோ, மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கியது குறித்து என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் ஏராளமான போர்களை மத்தியஸ்தம் செய்து தடுத்து நிறுத்தியிருக்கிறேன்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். தாய்லாந்து - கம்போடியா, காங்கோ - ருவாண்டா நாடுகளுக்கு இடையேயான போர்களையும், வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து நிறுத்தியிருக்கிறேன்.
கேளுங்கள், நீங்கள் சண்டையிடப் போகிறீர்கள், உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சண்டையிட்டுக் கொள்ளுங்கள். இதயத்தை வெளியேற்றிவிட்டு சண்டையிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். ஆனால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டேன். உடனடியாக அனைவரும் போரை நிறுத்தி விட்டார்கள்.
இந்த வகையில் நான் எண்ணற்றப் போர்களை நிறுத்தியிருக்கிறேன். இப்படிப்பார்த்தால் சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு போரை நிறுத்தியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால், உங்களுக்குத் தெரியுமா, இதன் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்களை நான் காப்பாற்றியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.