ரஷியா அதிபர் புதின் கோப்புப்படம்
உலகம்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு?

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு செய்திருப்பதாகத் தகவல்.

தினமணி செய்திச் சேவை

அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷியாவுக்கு அருகே நிலைநிறுத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவை எதிர்த்து 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் என்றழைக்கப்படும் ரஷியா இடையே கடந்த 1987 ஆம் ஆண்டு இடைநிலை-தூர அணுஆயுதப் படைகள் (INF) ஒப்பந்தம் கையெழுத்தானது.

பனிப்போர் கால ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷியா வெளியேறினால், அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.

மேற்கு நாடுகளின் செயல்கள், தங்கள் பாதுகாப்பு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக ரஷியா கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷியா - உக்ரைன் மோதலை தடுத்து நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ரஷியா உடன்படாத நிலையில், ரஷியாவை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை அந்நாட்டின் அருகே நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா.

கடந்த 1987ஆம் ஆண்டு அமெரிக்கா - ரஷியா இடையே, தரையிலிருந்து 500 முதல் 5,500 கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கும் அணுசக்தி ஏவுகணை ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இரு நாடுகளும், குறைந்தது முதல் நடுத்தர தொலைவுகளைத் தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அணு ஆயுதப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திருந்தது.

இதற்கு முன்பு, 2019ஆம் ஆண்டு ரஷிய வன்முறை நடவடிக்கையின்போது, டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக முதல்முறை பதவி வகித்தபோதே, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அப்போது, ரஷியா, தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்றும், அமெரிக்காவும் அதுபோல செய்யக் கூடாது என்றும் கூறியிருந்தது.

ஆனால், தற்போது, ரஷியாவுக்கு அருகே, அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ரஷியா முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT