அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்படும் நபர்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
கேலப் (Gallup) என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம், அமெரிக்கர்களால் வெறுக்கப்படும் மற்றும் விரும்பப்படும் நபர்கள் குறித்த 14 பேர் அடங்கிய பட்டியலைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் முக்கியஸ்தர்கள் உள்பட சில வெளிநாட்டுத் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியலில் 46 புள்ளிகளுடன் போப் லியோ XIV முதலிடம் (விரும்பப்படும் நபராக) பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் -11 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் -16 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் உள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2 மாதங்கள் முன்னர்வரையில் ஆதரவு தெரிவித்து, பின்னர் எதிர்ப்பு தெரிவித்துவந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்தான் -28 புள்ளிகளுடன் (வெறுக்கப்படும் நபராக) கடைசி இடத்தில் (14) உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.