அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதலை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அஜர்பைஜான் - ஆர்மீனியா இடையேயான நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், வெள்ளைமாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டு பிரகடனம் என்ற ஆவணத்தில் டிரம்ப் உள்பட அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், ஆர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன் மூவரும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்போது, டிரம்ப் பேசுகையில், இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளும் போரை நிறுத்திக் கொள்ளவும், வர்த்தகம் மற்றும் பயணம், நட்புறவு, ஒருவருக்கொருவர் இறையாண்மையை மதிக்கவும் உறுதிபூண்டுள்ளனர்.
இரு தலைவர்களும் சிறந்த நட்புறவைக் கொண்டிருப்பர். மோதல் ஏதேனும் ஏற்பட்டாலும், என்னை அழைப்பார்கள்; நாங்கள் அதனைச் சரிசெய்வோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட வேண்டும் என்று இருநாட்டுத் தலைவர்களும் கோரினர்.
``சமாதானத்தைக் கொண்டுவரும் டிரம்ப் இல்லாமல், இந்த முன்னேற்றம் (போர்நிறுத்தம்) சாத்தியமில்லை. நோபல் பரிசுக்கு தகுதியானவர் டிரம்ப். அவருக்கு இல்லையென்றால், அமைதிக்கான நோபல் பரிசுக்கு யார் தகுதியானவர்கள்?’’ என்று இருநாட்டுத் தலைவர்களும் கூறினர்.
மேலும், இதுகுறித்து நோபல் குழுவுக்கு ஒரு கூட்டு முறையீட்டை அளிக்கவும் முன்வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.