நிலநடுக்கம் 
உலகம்

நியூஸிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவு!

நியூஸிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஹாக்ஸ் விரிகுடாவில் 6 ஆயிரம் பேர் உணர்ந்ததாக தகவல்..

இணையதளச் செய்திப் பிரிவு

நியூசிலாந்தின் லோயர் நார்த் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவானது. ஹேஸ்டிங்ஸ் நகருக்கு தெற்கு 20 கிமீ தொலைவில் ஹாக்ஸ் விரிகுடா பகுதியில் 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜியோநெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை சுமார் 6 ஆயிரம் பேர் உணர்ந்ததாக தெரிவிக்கின்றது.

ஹாக்ஸ் விரிகுடா நியூசிலாந்தின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும். முன்னதாக 1931இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 256 பேர் கொல்லப்பட்டனர்.

50 லட்சம் மக்கள் வசிக்கும் நியூசிலாந்து, "நெருப்பு வளையம்" பகுதியில் அமைந்துள்ளது, இது பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் வளைவாகும்.

A magnitude 4.9 earthquake struck New Zealand's lower North Island Wednesday, with a jolt rated as moderate by the country's geological sciences agency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

போதை அரக்கனை விரட்டுவோம்!

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

அரசு மருத்துவமனையில் தகராறு செய்த இருவா் கைது

பால முனீஸ்வரா் கோயில் ஆடி பெருந்திருவிழா

SCROLL FOR NEXT