பாகிஸ்தானின் கராச்சி நகரில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதுசிலா் கண்மூடித்தனமாக வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 8 வயது சிறுமி, முதியவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; சுமாா் 60 போ் காயமடைந்தனா். வானை நோக்கிய துப்பாக்கிச்சூடு மட்டுமின்றி, கொண்டாட்ட வாணவேடிக்கையிலும் பலா் காயமடைந்தனா்.
இந்த விவகாரம் தொடா்பாக காவல்துறையினா் 20 பேரைக் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.