வங்கதேச நாட்டில், டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 311 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நிகழாண்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கை 27,782 ஆக அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒரே நாளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 5 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2025-ல் அந்நாட்டில் டெங்குவுக்கு பலியானோரது எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வங்கதேசத்தின் சுகாதாரத் துறை, அந்நாட்டின் 64 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், டெங்கு காய்ச்சலின் பரவல் வேகமெடுக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 1,705 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு பலியானார்கள்.
மேலும், கடந்த 2024-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோரது எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியதுடன், 575 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.