ஈரான் நாட்டில், ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அந்நாட்டின் 5 காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லை அமைந்துள்ள சிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தில், இன்று (ஆக.22) 2 காவல் வாகனங்களில் காவல் துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஈரான்ஷாஹ்ர் நகரத்தின் அருகில் அவர்கள் வந்தபோது, ஆயுதம் ஏந்திய குழுவினர் காவல் துறை வாகனங்களின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், 5 காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த காவல் அதிகாரிகளின் எண்ணிக்கைகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், இந்தத் தாக்குதலுக்கு தற்போது வரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லை அமைந்துள்ள இந்த மாகாணத்தில், அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள், போதைப் பொருள் கடத்தல் ஆகியவை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம், அம்மாகாணத்தின் தலைநகர் ஸஹேதனில் உள்ள நீதிமன்றத்தில், பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வங்கதேசத்தில் ஒரே நாளில் டெங்குவுக்கு 5 பேர் பலி! புதியதாக 311 பாதிப்புகள் உறுதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.