உலகம்

சீனா: பாலம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

சீனாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகினா்.

தினமணி செய்திச் சேவை

சீனாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகினா்.

இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறுகையில், வடமேற்கு சீனாவின் கிங்ஹை மாகாணத்தில் உள்ள மஞ்சள் ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தில், எஃகு கயிறு அறுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தன.

1.6 கி.மீ நீளமும், 55 மீ உயரமும் கொண்ட இந்த பாலத்தில் 16 தொழிலாளா்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனா். இந்த சம்பவத்தில் மாயமானவா்களைத் தேடும் பணியில் படகுகள், ஹெலிகாப்டா், ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வாக்குத் திருட்டு: ராகுல், தேஜஸ்வி இருசக்கர வாகனப் பேரணி!

வார்த்தைகளால் விவரிக்க முடியாது..! ஓய்வு குறித்து புஜாரா உருக்கம்!

உள்நாட்டில் தயாரான பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி!

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 7ஆக உயர்வு

ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

SCROLL FOR NEXT