டொனால்ட் டிரம்ப் - கோப்புப்படம் 
உலகம்

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று மீண்டும் சொல்லியிருக்கும் டிரம்ப் இந்த முறை தொப்பி அணிந்திருந்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் உருவாகியிருக்கும், ஆனால், நான்தான் அதை நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மீண்டும் கூறியிருக்கிறார்.

ஆனால், இந்த முறை, ஓவல் அலுவலகத்தில் இருந்துகொண்டு, "டிரம்ப் எல்லாவற்றிலும் சரியாகவே இருந்தார்" என்ற வாசகம் இடம்பெற்ற தொப்பியை அணிந்துகொண்டு பேசியிருக்கிறார்.

புது தில்லியிலிருந்து மறைமுகமாக மறுப்புகள் வந்தாலும்கூட, அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் மீண்டும் தானே, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறுவதை மட்டும் நிறுத்தவில்லை.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது.

ஆனால், ஆரம்பத்தில் 25வது முறை, 29வது முறை என எண்ணப்பட்டு வந்த டிரம்பின் இந்த போரை நானே நிறுத்தினேன் என்ற அறிவிப்பு, பிறகு ஒரு நாளில் பல முறை சொன்னதால் வந்த எண்ணிக்கைக் குழப்பத்தில், இன்றுடன் அவர் எத்தனையாவது முறை அதைச் சொல்லியிருக்கிறார் என்பது மட்டும் கணக்கில்லாமல் போய்விட்டது.

சனிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் ஒரு வெள்ளை நிற தொப்பி அணிந்து கொண்டு அவர் பேசினார். அந்த வெள்ளை தொப்பியில் டிரம்ப் எல்லாவற்றிலும் சரியாகவே இருப்பார் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. அதை அணிந்துகொண்டு, இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போரை சமரசம் செய்து நிறுத்தினேன். அது அணு ஆயுதப் போராக மாறவிருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் வந்திருப்பதாக மே 10ஆம் தேதி டிரம்ப் அறிவித்த பிறகு, இதுவரை தொடர்ச்சியாக 40க்கும் மேற்பட்ட முறைகள் அவர் இதனை சொல்லயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

எம் & எம் விற்பனை 16% உயா்வு

துணை நடிகை மீது தாக்குதல்: வியாபாரி கைது

ஹரியாணா காவல் துறை ஐஜி தற்கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

தீபாவளி: திருநெல்வேலி - செங்கல்பட்டு சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT