உலகம் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி ஏதோ ஓர் இடத்தில் முடிகிறது என்றால், அந்த கடைசி சாலை முடியும் இடம் நார்வேயில் அமைந்துள்ளது.
நமது கிரகம் ஒரு கோளம் என்பதால் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை. ஆனால், ஓரிடத்துக்கு மேல் நிலப்பரப்பு முடிகிறது, அதற்கு மேல் நிலப்பரப்பே இல்லை என்பதால்தான், இது உலகின் கடைசி சாலை என்று கூறப்படுகிறது.
இந்த சாலை முடியும் இடம், மிகப்பெரிய பனிப்பாறைகளும், பனியாக மாறிய கடல்பரப்புமாகக் காட்சியளிக்கும் என்றும் கூறுகிறார்கள்.
நார்வேயில் உள்ள இ-69 நெடுஞ்சாலைதான், உலகின் கடைசி சாலை என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. இந்த சாலை, வடக்குத் துருவத்துக்கு அருகில் முடிகிறது. இதற்கு மேல் நிலப்பரப்பு இல்லை என்பதால், சாலை ஓரிடத்தில் முடிந்துவிடும் அதிசயத்தை இங்குக் காணலாம்.
ஐரோப்பாவின் பொதுப் போக்குவரத்தாக உள்ள இந்த நெடுஞ்சாலை, ஓல்டெர்ஃப்ஜோர்டு முதல் நோர்ட்காப் நகரங்களுக்கு இடையே அமைந்திருக்கும் 129 கிலோ மீட்டர் சாலையாகும்.
இது உலகின் கடைசி சாலை என்ற அடையாளத்தை மட்டும் பெற்றிருக்கவில்லை. நள்ளிரவில் சூரியன் என்ற இயற்கையின் அதிசயத்துக்கும் பெயர் பெற்றிருக்கிறது. வாழ்நாளில் இ-69 நெடுஞ்சாலையில் ஒருமுறையேனும் பயணம் செய்துவிட வேண்டும். ஒருவேளை, நல்ல கோடைக்காலத்தில் அங்குச் சென்றால் நள்ளிரவில் சூரியனைக் காணலாம். ஆறு மாத காலம் முழுக்க பகலாக இருக்கும் என்பதால், நள்ளிரவு நேரத்திலும் நல்ல வெளிச்சம் இருக்கும். சூரியன் தெரியும்.
இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள் என்பதால் சாலைக்கு அருகே தற்போது விடுதிகள், உணவகங்கள் வந்துவிட்டன. இந்த சாலை வளைந்து வளைந்து செல்கிறது. அதன்பிறகு சாலையும் இல்லை. நிலப்பரப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.